ஆணுறைகளை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் டாப் 5 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவை 0.8 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.
ஆணுறையை வெறுக்கும் ஆண்கள்
இந்தியாவின் பூதாகரமான பிரச்னைகளில் ஒன்று மக்கள் தொகை அதிகரிப்பு. குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்பது, ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று மாறிய பிறகும் கூட, இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்றைய நிலையில் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தைப் பிடிக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 8 ஆண்டுகளில், அதாவது 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா, உலக மக்கள் தொகையில் முதல் இடத்தைப் பிடிக்கும்
என்.எஃப்.எச்.எஸ் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்தும்
டாப் 5 இந்திய மாநிலங்களில்
சண்டிகர் 27.3 சதவிகிதத்துடன் முதல் இடத்திலும்,
இதையடுத்து டெல்லி (19%),
பஞ்சாப் (18.9%),
உத்தரகாண்ட் (16.1%),
இமாசலபிரதேசம் (12.7%)
ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஆணுறைகளை மிகக் குறைவாக பயன்படுத்தும் டாப் 5 மாநிலங்களின் பட்டியலில்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவை 0.8 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், முதல் இடத்தில் ஆந்திரா (0.2%), அதற்கு அடுத்த 2-வது இடத்தில் தெலங்கானா (0.5%), 5-வது இடத்தில் பீகார் (1%) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் (National Family Health Survey (NFHS)-4 ) இது தெரியவந்திருக்கிறது.
ஆணுறையை வெறுக்கும் ஆண்கள்
உலக நாடுகளில்
பாகிஸ்தான் (9.9%),
மாலத்தீவு (11.7%),
இரான் (13.7%),
இலங்கை (6.1%),
சீனா (8.3%),
காங்கோவில் (13.9%),
போஸ்ட்வானா (35.8%),
ஹாங்காங் (50.1%),
ஜப்பான் (46.1%),
ரஷ்யா (25%),
இங்கிலாந்து (7%) மற்றும்
அமெரிக்கா (11.6 %) ஆணுறை பயன்பாடு இந்தியாவை விட அதிகரித்துக் காணப்படுகிறது