/ இது நடிகையின் கொலைக்கு அடுத்த வெர்ஷன்! பட தயாரிப்பாளர் தேவர் சொல்வாராம் – யானைக்கு பதில் நாயை போடுப்பா – மற்றபடி அதே கதைதான் என்பாராம். அதே போல ஒரே கதைக்கரு – இரு கதை! முதலில் “நடிகையின் கொலை” படிங்கள்….பிறகு இதற்கு வாருங்கள். />
அதே !
அவசரமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் மாதிரி இருக்கும் வீட்டுக்கு இரவு 10 மணிக்கு சென்றேன். இந்த வீட்டுக்கு சொந்தக்காரி தமிழகத்தின் கவர்ச்சி பாம் பூர்ணிதா ! நான் பூர்ணிதாவை துரத்தி, துரத்தி காதலித்து கடைசியில் ஒருவழியாக படுக்கையில் தள்ளிய விச்சு என்ற தமிழ் பட வில்லன் விச்சு என்ற விஸ்வநாதன்.
இதோ பூர்ணிதா ! பூர்ணிதாவை பார்க்கிறேன்……ஏ.சி வெளியே போவதை பற்றி கவலைப்படாமல் ஜன்னலை திறந்து கொண்டு பட்டு கேசம் பட படக்க இருக்கும் பூர்ணிதா ஒரு மாதத்திற்கு முன்பு வரை தமிழகத்தின் கனவுக்கன்னி…அவள் ஒவ்வோரு இன்ச் அங்கத்துக்கும் ரசிகர் மன்றம் இப்பவும் உண்டு. 18 வயதில் பல தமிழ் படங்களை தன்னை முன்னிலைப்படுத்தி பல வெற்றி படத்தை கொடுத்த 5.5″ சந்தனமரம்.
தமிழ் படங்களின் ராசிப்படி மும்பையிலிருந்து வந்த தேவதை….சந்தனமும், பால் வெண்மையும் கலந்து பல தொட்டி, பட்டிகளில் உள்ள இளைஞர்களின் கனவு நாயகி. ஆனால் உலக அழகிகளின் ஈடுக்கு தன் உடம்பை “பார்பி” பொம்மைபோல உடம்பை ரப்பராக வைத்திருக்கும் அழகு குவியல். கோவை இதழ், உதடுகள் லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்து இருக்கும். சிரித்தால் தீபாவளிதான்….ஆரோக்கியமான பற்கள்…ரோஸ் கலர் ஈறு தெரிய சிரிப்பதை பார்க்க பலர் தவம் கிடைந்தனர்.
நான் வளரும் கலைஞன்….நான் சுருக்கமாக தமிழ் படங்களில் வரும் ரகுவரன் மாதிரி அழகான, ஆரோக்கியமான வில்லன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். நன்றாக ஆறு அடி உயரம். ஆரோக்கியமான உடல்.. ஆரோக்கியம் என்றால் சாதாரண ஆரோக்கியம் இல்லை –
தினமும் 5 மணி நேரம் ஜிம்மில்தான் வாழ்க்கை! இல்லையென்றால் “பறந்து பறந்து அடிக்கும்” தமிழ் ஹீரோக்களை சமாளிக்க வேண்டாமா? நல்ல வெள்ளை. எப்போதும் யூனிபாஃர்ம் மாதிரி நீல ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் இருக்கும். இப்போதும் அப்படியேதான் வந்திருந்தேன்.
என் வாழ்க்கையே தூக்கி விட்டவள் பூர்ணிதாதான் ! நான் செய்த ஒரே தவறு – நான் ஏற்கனவே கல்யாணம் செய்து கொண்டது! ஆரம்ப கால தவறு! நிகழ்காலத்திலும் தொடர்கிறது! கல்யாணம் செய்யும்போது மப்பும் மந்தாரமாக இருந்தாள் சாந்தி! கல்யாணம் ஆனவுடனேயே நாளொரு பொழுதும் சதையை கூட்டி இப்போது நடக்கவே முடியவில்லை…
எப்போதும் சாமி, பூஜை, புனஸ்காரம் என்று ஏறக்குறைய பாதி சாமியாராகி விட்டாள் ! இப்போது பெரிய ப்ராப்ளம் எனக்கு டைவோர்ஸும் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறாள்….பூர்ணிதா கூட பழகவும் விட மாட்டேன் என்று ஒரே தொல்லை!
இப்போது கரு நீலத்தில் நைட்டி அணிந்திருந்தாள்…கருநீல நைட்டியில் மேல் இரண்டு பட்டன் திறந்து விட்டிருந்ததால் அவள் சதைக்கோளம் பாதி தெரிந்தது…போதையூட்டும் அழகு! கூவிக்கொண்டு வந்த பறவைகளும் அவள் அருகில் வந்தவுடன் கூவுதலை ரசித்துக்கொண்டு மௌனமாக சென்றது. விடியற் காலை சூரியன் சிவப்பாகி வானம் முழுதும் பறவைகள்….
“என்ன பூர்ணி டார்லிங்! கம் லெட் அஸ் கோ டு பெட்!”
“ச்சீய் எப்போதும் அதே நினைப்பு”
“இல்லை டியர்…அதை விட்டால் வேறு என்ன நினைப்பு வரும்”
“அதைதான் சொல்ல வந்தேன்! உன் தர்ம பத்தினி கடைசியாக என்ன சொன்னாள்!”
“டைவோர்ஸ் கொடுக்க மாட்டாளாம்”
நிதானமாக என்னை பார்த்தாள்.
“அப்போ அவள் கதையை முடித்து விடு!” என்றாள் மெதுவாக !
“யூ மீன் இட்! மை காட் நானும் இதையேதான் நினைத்தேன்”
“எஸ் ! வேறு வழியில்லை விச்சு! நாம் இணைந்து வாழ வேண்டுமென்றால் உன் மனைவி சாக வேண்டும். அவள் கதையை முடித்து விடு! அப்போதான் நாம் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியும்!”
“நோ ப்ராப்ளம்! நான் பார்த்துக்கொள்கிறேன்”
“வாவ்! மாட்டிக்கொள்ள மாட்டீர்களல்லவா?”
“பூர்ணா இதற்கு ரிஸர்ச்சே செய்தேன்…இங்க்லீஷ் படம் பார்த்தேன்…எல்லா துப்பறியும் புத்தகம் படித்தேன்…என் எல்லா போலீஸ் நண்பர்கள், லாயர் எல்லாம் பார்த்தேன். துப்பாக்கி, குண்டு, பாய்ஸன், மருந்துகள் இத்யாதி, இத்யாதி! என்று எல்லாம் அனலைஸ் பண்ணியாகி விட்டது”
“வாவ்! வெரி இண்ட்ரெஸ்டிங்… சொல்லேன் என்ன பண்ண போறே!”
ஏற்கனவே பெரிய கண்கள்…இதில் மை வேறு போட்டுக்கொண்டு இருந்ததால் இன்னும் பெரியதாக இருந்தது…கண்கள் இலவசமாக விஸ்கி சப்ளை செய்துக்கொண்டு இருந்தது…கண்கள் “சொல்லேன் அந்த ரகசியத்தை!” என்று கெஞ்சியது! என்னை திருமணம் செய்யப்போகிறவள்…சொன்னால் என்ன தப்பு!
“ஒரு தடவை ஷெர்லாக் ஹோம்ஸ் சொன்னார்! எந்த ஒரு கொலைகாரனும் கொலை செய்த இடத்தில் ஒரு தடயமாவது விட்டு வைப்பானாம்! நான் எப்போதும் உடைக்க பாடுபடுவது இந்த விதியைதான்! கொலை செய்து தப்பிக்க பெஸ்ட் மெத்தெட் அலிபி!”
“அலிபி?”